குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
அவர்களின் படைப்பும் பணியும்

குழந்தைக் கவிஞரின் வரலாறு

குழந்தைக் கவிஞர் ஆற்றிய பணிகள்

அலுவலகப் பணி

1940 ஆம் ஆண்டில் 'சக்தி' அலுவலகத்தில் பொருளாளராகச் சேர்ந்தார்.

1941 – 1982 வரை இந்தியன் வங்கியில் பணியாற்றி காரைக்குடி வட்டார மேலாளராக ஒய்வு பெற்றார்.

இந்தியன் வங்கியின் அனுமதியோடு Ford Foundation நிறுவிய தென்மொழிப் புத்தக டிரஸ்டின் குழந்தைப் புத்தக சிறப்பு அலுவலராக 1957 – 1962 வரை பணிபுரிந்தார்.

பொறுப்பாசிரியராக இருந்த பத்திரிகைகள்

1944 - 1951 புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த 'பாலர்மலர்', ‘டமாரம்’, ‘சங்கு’

1951 முதல் 1954 ‘பூஞ்சோலை’

1983 முதல் 1989 கல்கி நிறுவனத்தின் சிறுவர் மாத இதழான 'கோகுலம்'

குழந்தை எழுத்தாளர் சங்கம்

• 1950 ஆம் ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவினார்

• 1950 - 1955 பொதுச் செயலாளர்

• 1956 - 1961 தலைவர்

• 1962 – 1967 ஆலோசகர்

• 1968 - 1989 தலைவர்

இவர் நடத்திய குழந்தை இலக்கிய மாநாடுகள்

• சென்னையில் முதல் ஆறு குழந்தை இலக்கிய மாநாடுகள் (1959, 1961, 1963, 1972, 1977, 1979 ஆண்டுகளில்)

• 1981ல் ஏழாவது மாநாடு காரைக்குடியில்

• 1987ல் எட்டாவது மாநாடு கோவையில்

மாநாடுகளில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள்:

• குழந்தைப் புத்தகக் கண்காட்சி

• குழந்தைகளின் கலை நிகழ்ச்சி

• குழந்தைகளுக்கான நூல் வெளியீடு

• போட்டிகள், பரிசுகள்

• கருத்தரங்கு

• குழந்தை இலக்கியத்திற்கு நீண்ட காலமாகத் தொண்டாற்றி வரும் குழந்தை எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு விருதுகள்

'குழந்தை எழுத்தாளர் யார்? எவர்?'

• குழந்தை எழுத்தாளர்களின் புகைப்படத்துடன் அவர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய 'குழந்தை எழுத்தாளர் யார்? எவர்?' என்ற நூலைத் தயாரித்து வெளியிட்டார்.

தமிழ் எழுத்தாளர் சங்கம்

• 1956 – 1959 பொதுச் செயலாளர்

• 1959 – 1960 துணைத் தலைவர்

• 1961ல் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர்

• 1966 ஆம் ஆண்டில் தலைவர்.

• 'தமிழ் எழுத்தாளர் யார் - எவர்' என்ற விவரத் தொகுப்பு நூலைத் தயாரித்து வெளியிட்டார்

சொற்பொழிவுகள்

• 1979ல் 'கல்கி' ரா. கிருஷ்ண மூர்த்தி நினைவு அறக்கட்டளைக்காக 'வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்' என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார்

• 5 ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு அமைப்புக் குழு உறுப்பினர். 'தமிழில் குழந்தை இலக்கியம்' என்னும் ஆய்வுக் கட்டுரை படித்தார்.

பிற இலக்கிய பணிகள்

• 1956ல் டில்லியில் சாகித்ய அகாதெமி நடத்திய அகில இந்திய புத்தகக் கண்காட்சியின், தமிழ் பகுதி அமைப்பாளராகப் பணிபுரிந்தார்.

• தமிழக அரசு நடத்திய பாரதியாரின் 81 ஆம் ஆண்டு விழாக் குழுவில் உறுப்பினராக இருந்து, பாரதி கண்காட்சி நடத்தினார்.

• 1961ல் கொழும்பு நகரில், இலங்கைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சர்வதேசப் புத்தகக் கண்காட்சியைத் துவக்கிவைத்தார்.

• 1962ல் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பேரவை நடத்திய மாநாட்டிற்கு வரவேற்புக் குழுத் தலைவர்.

• 1962ல் கொழும்பு நகரில் நடந்த யுனெஸ்கோ கருத்தரங்கில், இந்திய நூலாசிரியர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.

• சிம்லா, புவனேஸ்வர், பெங்களூர், மைசூர், டில்லி முதலிய இடங்களில் நடைபெற்ற குழந்தை இலக்கியக் கருத்தரங்குகளில் பங்கு பெற்றார்.

• யுனெஸ்கோவிற்காக, தமிழில் குழந்தைகள் படிக்கும் பழக்கம் பற்றி ஆராய்ந்து, இவர் தயாரித்த அறிக்கை நூலாக வெளிவந்துள்ளது.

• பல குழந்தை எழுத்தாளர்கள் தோன்றவும், அவர்கள் வளரவும் நிறைய வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தார்.

• ஆரம்பநிலை எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் வெளிவர உதவினார்.

எழுதியுள்ள நூல்கள்

பாடல்கள் 22

கதைகள் 8

நாவல்கள் 3

மொழிபெயர்த்தநூல்கள் 7

தொகுத்தநூல்கள் 4

பிறநூல்கள் 18

பரிசு பெற்ற நூல்கள்

மத்திய அரசின் பரிசு பெற்ற நூல்கள்:

o மலரும் உள்ளம் (முதல் தொகுதி)

o பாட்டிலே காந்தி கதை

தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்கள்:

o மலரும் உள்ளம் (முதல் தொகுதி)

o பாப்பாவுக்குப் பாட்டு

o நல்ல நண்பர்கள்

o பெரியோர் வாழ்விலே

o சின்னஞ்சிறு வயதில்

o பிள்ளைப் பருவத்திலே

குழந்தைக் கவிஞரின் முக்கிய விழாக்கள்

குழந்தை இலக்கிய பணி வெள்ளி விழா.

தேதி: 22.11.1970,

இடம்: சென்னை

விழாக்குழுத் தலைவர்: ஏ. வி. மெய்யப்பச் செட்டியார்

விழா தலைமை: நெ. து. சுந்தரவடிவேலு, துணைவேந்தர் சென்னைப் பல்கலைக் கழகம்.

நூல் வெளியிட்டவர்: மா. அனந்தநாராயணன், தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம்.

கவியரங்கத் தலைமை: கொத்தமங்கலம் சுப்பு. 25 கவிஞர்கள், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களைப் பற்றித் தாங்கள் எழுதிய கவிதைகளை அரங்கேற்றினர்.

வெளியிடப்பட்ட நூல்: ‘சிறுவருக்கு கவிதை தந்தவர் கதை’, எழுதியவர் புலவர் அப்துல் கரீம்

50வது பிறந்தநாள் விழா

விழாத் தலைமை: புலவர் தணிகை உலகநாதன் (தலைவர், சென்னை வானொலி சிறுவர் சங்கப் பேரவை)

பாராட்டியவர்: பெ. தூரன் (தலைமைப் பதிப்பாசிரியர், குழந்தைகள் கலைக் களஞ்சியம்)

சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு விழா:

சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு விழாக் குழு 1979 டிசம்பர் மாதத்தில் குழந்தைக் கவிஞருக்குப் பாராட்டு விழா நடத்தி, "மழலைக் கவிச் செம்மல்" என்ற பட்டத்தைக் கவிஞர் முடியரசன் வழங்கினார். இவ்விழாக் குழுவினர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அறக்கட்டளை நிறுவினர்.

மணிவிழா

இடம்: பிள்ளையார்பட்டி

தேதி: 04.11.1982

வைதீக முறைப்படி நடந்த இந்த மணி விழாவில் எழுத்தாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மணிவிழாத் தம்பதியருக்குப் பாராட்டு:

இடம்: குன்றக்குடி ஆதீனம்

பாராட்டியவர்கள்: ராஜாசர். முத்தையா செட்டியார், சௌந்தரா கைலாசம், சிலம்பொலி செல்லப்பன்

இடம்: கம்பன் மணி மண்டபம், காரைக்குடி

தலைமை: டாக்டர். வ. சுப. மாணிக்கம்

வெளியிடப்பட்ட நூல்: ‘அன்புக் குழந்தைக்கு அறுபது பாடல்கள்’

தொகுத்தவர்கள்: செல்ல கணபதி, ரா. பொன்ராசன்.

இராயவரம் முத்துமாரியம்மன் கோவிலில் இவருடைய 'சக்தி மிக்க தெய்வம் எங்கள் முத்துமாரி அம்பிகை' என்ற பாடல் கல்லில் பொறிக்கப்பட்டது.

70வது பிறந்தநாள் விழா

இடம்: கீழச்சிவல்பட்டி

கருத்தரங்கத் தலைப்பு: 'குழந்தை இலக்கியம் நேற்று, இன்று, நாளை'

75வது பிறந்தநாள் விழா

இடம்: அழகப்பா பல்கலைக் கழகக் கலையரங்கம்.

தலைமை: டாக்டர் ருக்மணி, துணைவேந்தர் அழகப்பா பல்கலைக் கழகம்.

சிறப்புரை: திருமதி ஆனந்தி, "கல்கி" அவர்களின் திருமகள்.

80வது பிறந்தநாள் விழா

இடம்: இராயவரம்

நூல் வெளியீடு: 'நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்' (கவிஞரின் 80 நண்பர்கள் அவரைப் பற்றி நினைவு கூர்ந்தது)

85வது பிறந்தநாள் விழா

இடம்: அழகப்பா பல்கலைக் கழகக் கலையரங்கம்.

தலைமை: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு: அஞ்சல்துறை தென்மண்டல இயக்குநர். திரு. க. பாலசுப்பிரமணியன்.

90வது பிறந்தநாள்

இடம்: அழகப்பா பல்கலைக் கழகக் கலையரங்கம்.

தலைமை: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

வெளியீடு: NCBH நிறுவனத்தார் பதிப்பித்த 'மலரும் உள்ளம்'. சிவகங்கை ஆக்ஸ்போர்டு பள்ளி ஆசிரியை சௌந்தரம் இசை அமைத்து, மதுரை கே. சலீம் பின்னணி இசையில் அப்பள்ளிக் குழந்தைகள் பாடிய குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் 10 பாடல்களை "ஆடும் மயில்" என்ற பெயரில் குறுந்தகடாக வெளியிடப்பட்டது.

95வது பிறந்தநாள்

இடம்: சிவானந்த மஹால், காரைக்குடி.

தலைமை: கவிஞர் செல்ல கணபதி

சிறப்புரை: கவிமாமணி இளையவன்

வெளியீடு: விஜயா பதிப்பகம் பதிப்பித்த குழந்தைக் கவிஞரின். "பழைய கதை புதிய பாடல்" கோவிலூர் பள்ளி மாணவ மாணவியர் பாடிய குழந்தைக் கவிஞரின் பாடல்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் விழாக்கள்

ராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி

காரைக்குடி சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு விழாக் குழு நிறுவிய குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அறக்கட்டளை மூலம் 1980ஆம் ஆண்டு முதல் பள்ளிக் குழந்தைகளுக்கு அழ. வள்ளியப்பா பாடல் போட்டி நடத்திப் பரிசுகள் வழங்கி வருகின்றனர்.

குடும்பத்தார் நடத்தும் விழா:

குழந்தைக் கவிஞர் மறைந்த 1989 ஆண்டு முதல் அவரது பிறந்தநாளை நவம்பர் 7ந்தேதி "குழந்தை இலக்கிய தினமா"கக் கொண்டாடி வருகிறார்கள்.

வள்ளியப்பா இலக்கிய வட்டம்:

1995ஆம் ஆண்டு முதல் "குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா" என்று கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் நடத்தி வருகிறார்கள்.

பாரதி கலைக் கழகம், சென்னை

பாரதி கலைக் கழகம் கடந்த பல ஆண்டுகளாக அழ வள்ளியப்பாவின் பிறந்தநாளை குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளுடனும், குழந்தைகளுக்கான கவியரங்கத்தோடும் நடத்தி வருகிறது.

அழ வள்ளியப்பா பெயரில் விருதுகள்/பரிசுகள்

தமிழ்ப் பேராயம், SRM பல்கலைக் கழகம்

SRM பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராயம் 2013 ஆம் ஆண்டு முதல் சிறந்த சிறுவர் நூலுக்கு, 'அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது' வழங்கி வருகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI)

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) புத்தகத் திருவிழாவில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கு 'அழ வள்ளியப்பா விருது' வழங்கி வருகிறது.

கார்முகிலோன்

2015 முதல் சிறந்த குழந்தைகளுக்கான நூல்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவுப் பரிசுகளாக வழங்கி வருகிறார்.

T.K.S.கலைவாணன்

2016 முதல் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது வழங்கி வருகிறார்.

பாராட்டுக்கள்

சிறப்புப் பட்டங்கள்

பட்டம்: ‘ குழந்தைக் கவிஞர் ’

வழங்கியவர்: தமிழ்வாணன் (கல்கண்டு ஆசிரியர்)
(பேச்சிலும், எழுத்திலும் தமிழ்வாணன், அழ வள்ளியப்பாவை 'குழந்தைக் கவிஞர்' என்றே குறிப்பிட்டார். அதையொட்டி பலரும் அப்படியே அழைக்கத் தொடங்கினர். அதுவே பட்டமாகத் திகழ்கிறது)

பட்டம்: ‘பிள்ளைக் கவியரசு’

வழங்கியவர்: நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார்

அமைப்பு: பாரதி இளைஞர் சங்கம்

பட்டம்: ‘மழலைக் கவிச் செம்மல்’

வழங்கியவர்: கவிஞர் முடியரசன்

அமைப்பு: சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு விழாக் குழு, காரைக்குடி

முன்னிலை: குன்றக்குடி அடிகளார்

பட்டம்: ‘தமிழ் பேரவைச் செம்மல்’

அமைப்பு: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

வழங்கியவர்: அமைச்சர் அரங்கநாயகம்

பாராட்டியவர்: அமைச்சர் காளிமுத்து

தகுதியுரை வழங்கியவர்: துணைவேந்தர் வ. சுப. மாணிக்கம்

வாழ்த்தும் கருத்தும்

bee